More

கார்த்திக் சுப்பாராஜிடம் கதை வாங்கிய ஷங்கர்…. தனுஷ் பட கதையே ஊத்திக்கிச்சு!…

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர். ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், காதலன், முதல்வன், அந்நியன், சிவாஜி, ஐ, எந்திரன் என அவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. சமூக கருத்தை கிராபிக்ஸ் கலந்து பேண்டஸி திரைப்படமாக கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே..

Advertising
Advertising

ஆனால், இந்தியன் 2 திரைப்படத்தை எப்போது கையில் எடுத்தாரோ அப்போது அவருக்கு பிடித்ததது சனி.. படம் துவங்கி சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், கமல்ஹாசன் – லைகா இடையே பஞ்சாயத்து, படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் மரணம், கொரோனா பரவலால் படப்பிடிப்புக்கு தடை, லைக்காவுக்கும், ஷங்கருக்கும் இடையே பஞ்சாயத்து என படம் துவங்கி இரண்டரை வருடங்களாக படம் முடங்கிக் கிடக்கிறது. 

படத்தை துவங்குவது குறித்து எதுவும் கூறாமல் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அமைதியாக இருந்ததால், பொறுத்து பொறுத்து பார்த்த ஷங்கர் ‘இந்தியன் 2’- வை விட்டுவிட்டு தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படமும், அதன்பின் பாலிவுட்டில் அந்நியன் 2 – படத்தை ரீமேக் செய்வதாகவும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இந்தியன் 2 -வை முடிக்காமல் வேறு படங்களை இயக்க செல்ல ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், ஷங்கருக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வெளியாகிவிட்டதால், தெலுங்கில் ராம்சரணை இயக்கும் பணியில் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். இப்படத்திற்கு பிரபல தெலுங்கு பட இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளது தெரியவந்துள்ளது. இவர் பாய்ஸ் படத்தில் நான்கு இளைஞர்களில் ஒருவராக, நடிகராக ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.

இப்படத்தில் ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. வழக்கமாக ஷங்கர் இயக்கும் படங்களுக்கு அவர்தான் கதாசிரியர். ஆனால், எந்திரன், சிவாஜி போன்ற படங்களின் கதை என்னுடையது என சிலர் நீதிமன்றம் சென்றனர். அதேபோல், அந்நியன் பாலிவுட் ரீமேக்கை ஷங்கர் அறிவித்த போது அந்நியன் கதை தயாரிப்பாளரான எனக்கே சொந்தம் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிந்திரன் ஏழரையை கூட்டினார். இந்த பிரச்சனைகள் காரணமாக வேறு ஒருவரிடம் கதையை வாங்குவோம் என முடிவெடுத்த ஷங்கர், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் கூறிய கதையைத்தான் தற்போது ராம் சரணை வைத்து தெலுங்கில் இயக்கவுள்ளாராம். இது அரசியல் பரபர ஆக்‌ஷன் கதையாகும். இப்படத்தில் ராம்சரண் முதலமைச்சராக நடிக்கவுள்ளார்.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கார்த்திக் சுப்பாராஜுக்கு கற்பனை திறன் குறைந்துவிட்டதாக கூட நெட்டிசன்கள் விமர்சித்தனர். தற்போது அவரிடம் ஷங்கர் கதை வாங்கியுள்ளதால் நக்கல் பிடித்த சிலர் இதையும் கிண்டலடிக்க வாய்ப்புண்டு…

Published by
adminram

Recent Posts