More

கத்தி தூக்குறவர் இல்ல… கத்தி சிரிக்கவைக்கிறவர்.. டான் ரகசியம் சொல்லும் இயக்குனர்

பொறியியல் கல்லூரியில் படிக்கும் ரகளையான ஸ்டூடண்டாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். அயலான் ஷூட்டிங்கை முடித்திருக்கும் சிவா, டாக்டர் ரிலீஸுக்குக் காத்திருக்கிறார். இந்தநிலையில், அவரின் புதிய படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Advertising
Advertising

இயக்குனர் அட்லியிடம் மெர்சல், தெறி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சிபிச் சக்கரவர்த்தி இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் குறித்து பேசிய சிபிச் சக்கரவர்த்தி, `இந்தப் படத்தின் கதையை முன்னாடியே எழுதிட்டேன். சமீபத்தில்தான் சிவா அண்ணாவைப் பார்த்து கதை சொல்ற வாய்ப்புக் கிடைச்சது. இந்தப் படத்துல இன்ஜினீயரிங் காலேஜ்ல படிக்கிற ரகளையான ஸ்டூடண்டா சிவா அண்ணா நடிக்கிறார். சீரியஸ் கதையெல்லாம் இல்லீங்க. நிறைய காமெடி இருக்கும். அப்புறம் ஏன் `டான்’ தலைப்புனு கேக்குறீங்களா… ஒவ்வொரு கேங்க்லயும் எல்லாத்தையும் கலாய்ச்சுக்கிட்டே இருக்க ஒருத்தர் இருப்பார்ல. அவரைப் பத்தின கதைதான். இவர் கத்தி தூக்குற டான் இல்லை. கத்தி சிரிக்க வைக்குற டான்’ என்றார். 

 

Published by
adminram

Recent Posts