More

அஜித்தோடு உங்கள் பெயரை சேர்த்து எழுதாதீர்கள் – மீண்டும் விஜய்யை சீண்டிய மீரா மிதுன்!

டிவிட்டரில் இந்தியாவின் பெருமை அஜித் விஜய் என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்த நிலையில் அதை கலாய்த்து மீண்டும் விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளார் மீரா மிதுன்.

Advertising
Advertising

சமீபகாலமாக நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை மிகவும் தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்து வருகிறார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன். இதனால் கடுப்பாகும் இரு நடிகர்களின் ரசிகர்களும் அவரை ஆபாசமாக திட்ட ரத்தக்களரியானது சமூகவலைதளம்.

இரு தர்ப்புக்கும் இடையிலான வார்த்தை வாந்தி சில நாட்களாக இல்லாமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் பிரச்சனையைக் கிளப்பியுள்ளார் மீரா மிதுன். சில தினங்களுக்கு முன்னர் #AjithVijayprideofIndia என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் ட்ரண்ட் செய்தனர். அதையடுத்து இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இது அஜித்துக்கு தெரியுமா. ஆம் அஜித் இந்தியாவின் பெருமைதான். ஆனால் உங்கள் நல்ல பெயரை கெடுத்துக்கொண்டு அஜித்தின் புகழை திருடப் பார்க்கிறீர்கள். ஓ இதுதான் கோலிவுட்டின் மாஃபியா செய்யும் வேலையா?’ எனக் கேட்டுள்ளார். இதனால் சீண்டப்பட்ட விஜய் ரசிக தரப்பு அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறதோ?

Published by
adminram

Recent Posts