More

குணா படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசனை தெரியாத நபர்களே இருக்க முடியாது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக திகழும் கமல்ஹாசனுக்கு தற்போது வரை மார்க்கெட் குறையவே இல்லை. அதேபோல் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

Advertising
Advertising

சினிமாவை தாண்டி தமிழக அரசியலில் களமிறங்கும் அளவிற்கு இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. அதற்கு காரணம் இவரது படங்கள் தான். ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

guna movie

அந்த வகையில் கமல் நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் குணா. இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக ரோஷினி என்ற நடிகை நடித்திருந்தார். இயக்குனர் சந்தானபாரதி இயக்கத்தில் வெளியான குணா படம் மட்டுமின்றி இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பிரபலமானது. 

அந்த வகையில் இப்படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன்” என தொடங்கும் பாடல் தற்போது வரை இளைஞர்களின் ஃபேவரைட் பாடலாக இருந்து வருகிறது. அதேபோல் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதை தாண்டி புனிதமானது” என்ற வாசகமும் பிரபலமாகும்.

guna movie

அதேபோல் ஒரு குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. நாளடைவில் அந்த குகை தற்போது குணா குகை என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு முதலில் மதிகெட்டான் சோலை என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால், அது அவ்வளவாக நன்றாக இல்லை என்பதால், பின்னர் குணா என்று பெயரை மாற்றி உள்ளனர்.

Published by
adminram

Recent Posts