More

3 மாதம் மாத தவணை (EMI) கட்ட வேண்டாம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் 725 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. 

Advertising
Advertising

21நாட்களுக்கு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவித்திருப்பதால் பொதுமக்கள் வீட்டிலே முடங்கியுள்ளனர். இதில் பலரும் தினக்கூலி பெற்று வருபவர்கள் ஆவர். அதேபோல், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்களும் அதிகம் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் ஏதாவது வங்கியில் லோன் வாங்கி மாத தவணையை கட்டி வருகின்றனர்.  தற்போது வீட்டில் முடங்கியிருப்பதால் மாத தவனைகளை கட்ட முடியாத நிலை ஏற்படுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி  ஆளுநர் சக்தி காந்ததாஸ் ‘பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருப்பதால் வங்கிகள் உள்ளிட்ட் நிதிநிறுவனங்கள் தாங்கள் வழங்கிய கடன்கள் மற்றும் தவணைகளை வசூலிக்க 3 மாதம் அவகாசம் வழங்கலாம் எனக் கூறியுள்ளார்.

தனியார் வங்கி, நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் மறு உத்தரவு வரை வசூல் செய்யக்கூடாது எனக்கேட்டுகொண்டா அவர் கடன் வசூலிப்பை 3 மாதம் நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், இதன் மூலம் வாடிக்கையாளர்களின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்படக்கூடாது எனவும் கூறினார்.

3 மாதம் கட்ட வேண்டாம் என்பது தள்ளுபடி அல்ல. 3 மாத அவகாசம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts