More

கனவு நிறைவேறியது!.. பிக்பாஸ் தர்ஷனின் முதல் அறிவிப்பு…..

பிக்பாஸ் வீட்டிற்கு சென்றது முதல் எல்லா டாஸ்குகளையும் அசால்ட்டாக விளையாடி அசத்தியவர் தர்ஷன். எனவே, அவரே வெற்றி போட்டியாளர் என பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களே நம்பினர். ஆனால், திடீர் திருப்பமாக, அவர் வெளியேற்றப்பட்டார்.

அதன்பின் காதலி சனம் ஷெட்டியுடன் பஞ்சயத்து, காதல் முறிவு என பல பிரச்சனைகளை அவர் சந்தித்தார். அதன்பின் அவர் திரைத்துறையில் நுழைய வாய்ப்புகளை தேடிவந்தார். ஆனால், சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில், தற்போது ஒரு இசை ஆல்பத்தில் அவர் நடித்துள்ளார். இந்த ஆல்பத்தில் அவருக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஆயிஷா நடித்துள்ளார். இந்த ஆல்பத்திற்கு ‘தாய்க்கு பின் தாரம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தின் டீசர் வீடியோ இன்று மாலை வெளியாகவுள்ளது. இதன் மூலம் தனது கனவாகியுள்ளதாக தர்ஷன் தெரிவித்துள்ளார்

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts