Categories: latest news

கோட் பட வசூலுக்கு வேட்டு வைக்க முடிவு பண்ண மம்மூட்டி மகன்!.. யாருக்கு ரிஸ்க்கா முடியப் போகுதோ?..

நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக போவதாக பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்துவிட்டனர். அந்த படத்தின் சிஜி காட்சிகளுக்காக வெளிநாட்டு நிறுவனத்துடன் அடிக்கடி பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் வெங்கட் பிரபு விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறைவு செய்ய உள்ளார்.

விஜய்யுடன் முதன் முதலாக பிரசாந்த் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும், மைக் மோகன், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, பிரேம்ஜி, வைபவ் என பெரிய நட்சத்திர பட்டாளம் கோட் படத்தில் நடித்துள்ளது.

நடிகர் விஜய் இந்த படத்தில் மூன்று விதமான லுக்கில் நடித்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்துக்காக கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் அங்கே ரசிகர்களை சந்தித்து பேசிய காட்சிகள் மற்றும் விஜய்யை சந்திக்க கேரளா ரசிகர்கள் பெரும் கூட்டமாக திரண்டது என மிகப்பெரிய ரசிகர்கள் மாநாட்டையே விஜய் நடத்தி இருந்தார்.

இந்நிலையில், துல்கர் சல்மான் தில்லாக விஜயுடன் நேருக்கு நேர் மோதத் தயாராகிவிட்டார். துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான கிங் ஆஃப் கொத்தா படம் பிளாப் ஆன நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார்.

லக்கி பாஸ்கர் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகப் போவதாக துல்கர் சல்மான் தற்போது ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். கேரளாவில், மம்மூட்டிக்கும் மம்மூட்டி மகனுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், கோட் படத்தின் வசூல் பாதிக்குமா? அல்லது மீண்டும் துல்கர் சல்மான் பல்பு வாங்குவாரா? என கேரளா ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

கோட் படம் செப்டம்பர் 5ம் தேதியும், லக்கி பாஸ்கர் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதியும் வெளியாகின்றன. மேலும், இந்த இரண்டு படங்களிலும் மீனாட்சி செளத்ரி தான் ஹீரோயின் என்பது மேலும், ஒரு சூப்பரான ட்விஸ்ட்.

Saranya M

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

2 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

2 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

9 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

10 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

12 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago