சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்திலும் பிரபல நடிகர்!
சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே விஜய் நடித்த ’சர்கார்’, ரஜினிகாந்த் நடித்த பேட்ட உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ள நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறித்து தெரிந்ததே
இந்த நிலையில் தனுஷ் நடித்து இயக்கும் 44வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் பொன்ராம் தற்போது ’எம்ஜிஆர் மகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் விஜய்சேதுபதி படத்தை இயக்குவார் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது