இதுக்கு 'இந்தியன்' படத்தையே ரீ ரிலீஸ் செய்திருக்கலாம்! கலாய்த்த சீரியல் நடிகை
நேற்று உலகெங்கிலும் இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அனைவரும் எதிர்பார்த்து இருந்த கமல் சங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2.
ஏழு வருட போராட்டங்களுக்குப் பிறகு படம் பெரிய அளவில் உருவாகி உலகெங்கிலும் கிட்டத்தட்ட 5000 ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. இந்தியன் படத்தில் முதல் பாகத்தின் பாதிப்பு இந்த படத்தின் மீது அதிக அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்தியன் 2 படத்தை பொருத்தவரைக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு படத்தை பார்த்த ரசிகர்கள் பல பேர் தங்களுடைய ஆதங்கத்தை இணையதள பக்கத்தில் கொட்டி வருகின்றனர். ஒரு பக்கம் கமலின் நடிப்பு ஷங்கரின் பிரம்மாண்டம் பாராட்டப்பட்டாலும் கதை வாரியாக பார்க்கும் பொழுது ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்பதுதான் பொதுவான ஒரு கருத்தாக பார்க்கப்படுகிறது.
அதிலும் இந்தியன் படத்தின் முதல் பாகத்தை பொருத்தவரைக்கும் அதில் பெரிதாக பேசப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால் ஏ ஆர் ரகுமானின் இசையில் அமைந்த பாடல்கள் தான். ஒவ்வொரு பாடல்களுமே இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. ஆனால் இந்தியன் 2 படத்தில் அனிருத் இசை எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தியன் படத்தில் பாட்டை கேட்கும் பொழுதே ஒரு உணர்ச்சிகரமான நாட்டுப்பற்றை நம்மிடையே ஏற்படுத்துபவையாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி ஒரு தாக்கம் இருந்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை பார்த்த பிரபல சீரியல் நடிகை ராட்சிதா படத்தை பற்றி வெளிப்படையான ஒரு விமர்சனத்தை தன்னுடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அவர் கூறியிருப்பது. இதுக்கு இந்தியன் படத்தையே ரீ ரிலீஸ் செய்திருக்கலாம் என்று அவர் பதிவிட்டிருக்கிறார். என்னதான் பிரபலமாக இருந்தாலும் ஒரு படத்தை பற்றி விமர்சனம் செய்யும் போது நல்லா இல்லாவிட்டாலும் கூட நன்றாக இருக்கிறது என்று தான் பலபேர் சொல்வார்கள். ஆனால் ரட்சிதா வெளிப்படையாகவே இந்த மாதிரி ஒரு கருத்தை பதிவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.