">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
70 வயதில் தந்தையான பிரபல நடிகர்!
உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அச்சத்தில் இருக்கும் இந்த வேளையில் பயமுறுத்தும் வகையில் பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் சில செய்திகள் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றன. அப்படி ஒரு செய்திதான் இது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் Richard Tiffany. இவரது பெயரை தெரியாதவர்களே இருக்க முடியாது.
1970ம் ஆண்டு அறிமுகமான இவர் தனது American Gigolo படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். 1991 ஆம் ஆண்டு சூப்பர் மாடல் Cindy Crawford மணந்த அவர், அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு மாடல் மற்றும் நடிகையான Carey Lowell என்பவரை மணந்தார்.
அவர்களுக்கு 11 வயதில் மகன் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்பு 2018-ஆம் ஆண்டு சமூக சேவகி Alejandra Silva என்பவரை மணந்து கொண்டார்.
அவர்களுக்கு 2019ஆம் ஆண்டு முதல் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து கொரோனாவால் உலகம் முழுவதும் கடினமான சூழ்நிலையில் இருக்கும் போது 70 வயதில் அவர் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.