">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மத்திய அரசின் உத்தரவு படி இ – பாஸ் முறை ரத்து!
கொரோனா ஊரடங்கினாள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் மாநிலங்களுள்ளேயே வெவ்வேறு இடங்களில் செல்வதற்கு கூட தடை விதிக்கப்பட்டது. ஆனால், திருமணம் , இறப்பு, மருத்துவம் தொடர்பான சில முக்கிய காரணிகளுக்கு மட்டும் அனுமதித்து இ – பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதையடுத்து பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் இ – பாஸ் வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் சற்றுமுன் மத்திய அரசு உத்தரவுப்படி புதுச்சேரியில் இன்று முதல் இ – பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரிக்கு செல்லவும் புதுச்சேரியிலிருந்து பிற மாநிலங்கள் செல்லவும் இ – பாஸ் தேவையில்லை என்று அந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.