இலவச பீடா  கேட்டு தகராறு – பீடா வியாபாரியின் காதை கடித்த வாலிபர்

Published On: December 27, 2019
---Advertisement---

594c0576c0c082639a90be92f091dc12

கடந்த 24ம் தேதி இரவு 10 மணியளவில் அவரது கடைக்கு வந்த ஒரு நபர் பீடா கேட்டுள்ளார். சத்யேந்திரா அவரிடம் காசு கேட்க, அவர் காசு இல்லை இலவசமாக கொடு எனக்கேட்டுள்ளார். அதற்கு சத்யேந்திரா மறுக்க, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது, பீடா கொடுக்காத ஆத்திரத்தில் அந்த நபர் சத்யேந்திராவின் உதடு, காது ஆகிய இடங்களில் கடித்துள்ளார். அப்போது வலிதாங்காமல் சத்யேந்திர சத்தம் போட அந்த நபர் அங்கிருந்து ஓடி விட்டார். அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட சத்யேந்திரா, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

எனவே, ஷாலு என்கிற அந்த நபரை போலீசார் கைது செய்தனர். மது போதையில் அவர் இப்படி நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.

Leave a Comment