More

ஜூன் மாதம் முதல் இலவச மளிகை பொருட்கள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாகவே கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தில் துவங்கி வேகமாக அதிகரித்து 30 ஆயிரத்தை தாண்டியது. அதுவும் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.

Advertising
Advertising

எனவே, அதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 24ம் தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கை அறிவித்தது. எனவே, அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று குறைய துவங்கியது. 

எனவே,தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி முதல் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள நிலை ஜூன் 7ம் தேதி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த செய்தி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், கொரோனா முழு  ஊரடங்கால் மளிகை பொருட்களை வாங்க செல்வது மக்களுக்கு சிரமமான ஒன்றாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram