More

ஏமாற்றம்னா.. கட்சி துவங்குவாரா? மாட்டாரா?.. என்ன செய்யப்போகிறார் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே நேரம் ஒருபக்கம் தனது கட்சிக்கான நிர்வாகிகளை நியமித்து வந்தார். அவ்வப்போது அவர்களை சந்தித்து பேசியும் வந்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. காரணம், இந்த சந்திப்பிற்கு பின் அவரின் அரசியல் நடவடிக்கை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘ நிறைய விஷயங்கள் பேசினோம். இதில் அனைவருக்கும் திருப்தி. ஆனால், எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை. ஏமாற்றமே. அது என்னவென்று அப்புறம் சொல்கிறேன்’ எனக்கூறினார். செய்தியாளர்கள் திரும்ப திரும்ப கேட்டும் எது அவருக்கு ஏமாற்றத்தை தந்தது என அவர் தெரிவிக்கவில்லை.

Advertising
Advertising

இந்நிலையில், கட்சி துவங்குவதற்கான அடிமட்ட வேலைகள் நடப்பதில் அவருக்கு திருப்தி இல்லையா? இல்லை எதில் அவருக்கு திருப்தி இல்லை? என்கிற கேள்வியை ஊடகங்கள் எழுப்பித் துவங்கியுள்ளன. மேலும், ஏற்கனவே யோசித்து யோசித்து காலம் தாழ்த்தி வரும் ரஜினிகாந்த் தற்போது ‘எனக்கு ஏமாற்றமே..திருப்தி இல்லை’ எனக்கூறி இருப்பதன் மூலம் அவர் கட்சியை துவங்குதை மீண்டும் தள்ளிப்போடுவர் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ரஜினியின் இந்த பேட்டி அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Published by
adminram

Recent Posts