">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
ஊரெங்கும் கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் இதுவரை 1683 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
குறிப்பாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மிகவும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் ஏப்ரல் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கும், சேலம் மற்றும் திருப்பூரில் ஏப்ரல் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த நாட்களில் இந்த மாவட்டங்களில் மருத்துவமனை, மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி கடையை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.