டெஸ்ட்டில் நம்பர் 1 – இந்த ஆண்டை சிறப்பாக முடித்த கோலி !

d9b9d03d21e7cad498982e02b01eb777

பேட்ஸ்மேன்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடம் பிடித்து இந்த ஆண்டை நிறைவு செய்யவுள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நேற்று துபாயில் வெளியிட்டது. அதில் 928 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு கடுமையான போட்டியாக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஸ்மித் 917 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் இவர்கள் இருவருக்கும் இடையே முதல் இடத்தைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

இனி இரு அணிகளுக்குமே 2019 ஆம் ஆண்டில் டெஸ்ட் தொடர் எதுவும் இல்லை என்பதால் இந்த ஆண்டை விராட் கோலியே முதலிடத்தை நிறைவு செய்வார். மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தின் வில்லியம்சன், நான்காவது இடத்தில் இந்தியாவின் புஜாராவும், ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் லபுசங்கே ஆகியோரும் உள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பாகிஸ்தானின் பாபர் ஆசமும். இந்திய வீரர் அஜிங்க்யே ரஹானேவும், ஆஸி வீரர் டேவிட் வார்னரும் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் ஆகியோர் உள்ளனர்.

Related Articles
Next Story
Share it