More

இத்தனை கோடி பட்ஜெட்டை தாங்குமா விக்ரமின் ‘கோப்ரா’? – தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர். அவர் இயக்கிய 7ம் அறிவு, துப்பாக்கி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். முதல் படம் வெற்றிப்படமாக அமைந்ததால், விக்ரமை வைத்து ‘கோப்ரா’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல வேடங்களில் விக்ரம், ஏ.ஆர். ரகுமான் இசை என இப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது. விஜயின் உறவினரான லலித் குமார்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். இவர் ஏற்கனவே மாஸ்டர் படத்தை தயாரித்த

ஆனால், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே போனது. சில நாட்கள் ரஷ்யாவிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 5 நாட்கள் படப்பிடிப்பு எனக்கூறிவிட்டு 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் அஜய் ஞானமுத்து.

இப்படத்திற்கு பட்ஜெட் ரூ.55 கோடி என துவங்கி தற்போது 65 கோடி வரை செலவு ஆகிவிட்டதாம். வர். தற்போது இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என அஜய் ஞானமுத்து கூற தயாரிப்பாளர் செம காண்டில் இருக்கிறாராம். அவர் கூறுவதை பார்த்தால் படத்தில் செலவு ரூ.75 கோடியை நெருங்கி விடும். ஆனால், விக்ரம் படங்களுக்கு அவ்வளவு வியாபாரம் கிடையாது. எனவே, புலி வாலை பிடித்து விட்ட கதையாக நொந்து போயுள்ளாராம் தயாரிப்பாளர்.

இப்படி படம்  எடுத்தால் தயாரிப்பாளர்கள் துண்டை தலையில் போட வேண்டியதுதான்!…

புரிந்து கொள்வார்களா இயக்குனர்கள்?….
 

Published by
adminram

Recent Posts