உஷாரான குட் பேட் அக்லி... திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்ததன் பின்னணி ! மறுபடியுமா?
லட்டு மாதிரி இரண்டு படங்கள்: அஜித் தற்போது விடாமுயற்சி படத்திலும் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து முடித்துள்ளார். இரு படங்கள் மீதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விடாமுயற்சி படத்தை பொறுத்தவரைக்கும் இந்த வருடம் பொங்கல் அன்று கண்டிப்பாக ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக படக்குழு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
எதாவது ஒன்றை விடுங்கப்பா: விடாமுயற்சி படமோ குட் பேட் அக்லி படமோ எதாவது ஒரு அஜித் படம் நிச்சயமாக பொங்கலுக்கு ரிலீஸாகிவிடும் என்றுதான் ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் இரண்டு படங்களுமே பொங்கலுக்கு வருவோம் என சொல்லி ரசிகர்களை ஏமாற்றியதுதான் மிச்சம். இந்த நிலையில் விடாமுயற்சி படம் ஜனவரி மாதம் கடைசி அல்லது பிப்ரவரி மாதத்தில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்பட்டது.
இதுதான் காரணமா?: குட் பேட் அக்லி படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென நேற்று குட் பேட் அக்லி தன்னுடைய ரிலீஸ் தேதியை அறிவித்தது. ஏப்ரல் 10 ஆம் தேதியை லாக் செய்திருக்கிறது குட் பேட் அக்லி. இதே தேதியில் தனுஷின் இட்லி கடை படமும் ரிலீஸாக இருக்கின்றது. இதற்கிடையில் குட் பேட் அக்லி ஏன் ஏப்ரல் 10 ஆம் தேதியை லாக் செய்தது என்பதற்கான காரணமும் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என வந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் ரிலீஸாகும் என்ற ஒரு செய்தி வெளியானது. ஆனால் சினிமா வட்டாரத்தில் விடாமுயற்சி படம் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குத்தான் குறி வைத்ததாக ஒரு பேச்சு அடிபட்டு வந்தது. இதை எப்படியோ மோப்பம் செய்த குட் பேட் அக்லி இந்த முறையும் விட்டுக்கொடுக்க தயாராகவில்லை போல.
அதனால்தான் முன்னதாகவே ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துவிட்டது. ஏற்கனவே பொங்கலுக்கு குட் பேட் அக்லி படம் வரவேண்டியது. ஆனால் விடாமுயற்சி படத்திற்காகத்தான் தன்னுடைய ரிலீஸ் தேதியை விட்டுக் கொடுத்தது குட் பேட் அக்லி. ஆனால் இந்த முறை எதற்கும் அசைவதாக இல்லை போல.