More

இந்திய முதலீட்டு சந்தையில் முதலிடம் – தமிழக அரசு சாதனை

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. கல்வி, விவசாயம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழகத்தின் வளர்ச்சியை உயர்த்தும் வகையில் செயலாற்றி வருவது அனைவரும் அறிந்ததே.

Advertising
Advertising

இந்நிலையில், வருகிற 2021ம் ஆண்டிற்கான முதல் பகுதியில் (H1FY21) இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்துள்ளதாக கேர் மதிப்பீடுகள் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் 16 சதவீத முதலீடுகளை ஈர்த்துள்ள நிலையில், ஆந்திரா மாநிலம் 11 சதவீத முதலீடுகளையும், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் 7 சதவீத முதலீடுகளையும் பெற்றுள்ளது. கடந்த வரும் இதே நேரத்தில் தமிழ்நாடு 3வது இடத்தில் இருந்தது.

இந்த வருட முதல் பகுதியில் ஆந்திர பிரதேசம் (H1FY20) ரூ.1.1 டிரில்லியன் மதிப்பில் 23 சதவீத முதலீடுகளை பெற்றிருந்தது. ஆனால், தமிழகம் H1FY21 அதிகபட்ச ஷேராக 16 சதவீத்தோடு 20 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.

இந்த வருட முதல் 3 மாதங்களில் தமிழகமே புதிய முதலீடுகளை பெற்றதில் முதலிடத்தில் இருந்தது. இதுவரை தமிழகம் ரூ.23,332 கோடி மதிப்புடைய 132 திட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

Published by
adminram

Recent Posts