More

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த பட ஹீரோ இவர்தான்!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்ப்பில் சமீபத்தில் வெளியான ’தர்பார்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ’தளபதி 65’ படத்தின் இயக்குனர் பட்டியலில் ஏஆர் முருகதாஸ் பெயர் முதல் மூன்று இடங்களில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

Advertising
Advertising

இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஏஆர். முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான கதையை ஏற்கனவே அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அல்லு அர்ஜுனுடன் கூறி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விரைவில் ஆரம்பிக்கும் என்றும் கூறப்படுகிறது

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாகும் என தெரிகிறது. ஏற்கனவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் என்ற திரைப்படத்தை தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஏஆர் முருகதாஸ் இயக்கி வந்த நிலையில் தற்போது மற்றொரு பிரபல தெலுங்கு நடிகரின் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram

Recent Posts