Connect with us
sathyaraj

Cinema News

சேர்ந்து நடிக்க வாய்ப்பே இல்லாத டாப் நடிகர்கள்!.. ரஜினியிடம் முரண்டு பிடிக்கும் சத்தியராஜ்!…

சினிமா உலகம் என்றாலே போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி அதிகம் உள்ள ஒரு துறைதான். ஒருவருக்கு உதவி செய்து ஏற்றி விடுவதை விட அவரின் காலை பிடித்து கீழே இழுத்து விட நிறைய பேர் காத்திருப்பார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் வளர அனுமதிக்கவோ, உதவி செய்யவோ மாட்டார்கள்.

அப்படியே ஒருவர் கஷ்டப்பட்டு மேலே போனாலும் அவரை காலி செய்ய நல்ல சகுணம் பார்த்து காத்திருப்பார்கள் இதையெல்லாம் தாண்டித்தான் சினிமா உலகில் நீடிக்க வேண்டும். அதற்கு காரணம் கோடிகள் புழங்கும் துறை சினிமா. அதோடு, வெற்றி பெற்றுவிட்டால் பணம், பேர், புகழ் என எல்லாம் கிடைக்கும். அது அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் கிடைத்து விட அனுமதிக்க மாட்டார்கள். அதுதான் முக்கிய காரணம்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெள்ளி விழா படங்கள்… வருடக்கணக்கில் ஓடிய சந்திரமுகி..

அதோடு, அப்படி கஷ்டப்பட்டு மேலே வந்த நடிகர்களும் கூட சக நடிகர்களுடன் இணைந்து நடிக்க மாட்டார்கள். அதற்கு அவர்களின் ஈகோ இடம் கொடுக்காது. ஹாலிவுட், பாலிவுட்டை போல கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கவே மாட்டார்கள். அப்படியே ஒரு படத்தில் நடித்தாலும் அது வளரும் நேரத்தில் மட்டுமே இருக்கும்.

அப்படி எப்போதுமே சேர்ந்துந் நடிக்க வாய்ப்பில்லாத சில நடிகர்களை பற்றி பார்ப்போம். விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் உச்சத்துக்கு போனவர் சிவகார்த்திகேயன். அதே டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர் சந்தானம். சிவகார்த்திகேயனை பார்த்துதான் நாமும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என சந்தானம் முடிவு செய்ததாக சொல்லப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை.

இதையும் படிங்க: காத்திருந்தவங்க கேனைகளா? பாண்டியராஜனிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி.. இது எப்போ நடந்தது?

அதேபோல், விஜய் – அஜித், விக்ரம் – சூர்யா, ரஜினி – கமல் ஆகியோர் இணைந்து நடிக்க வாய்ப்பு இல்லை. போக்கிரி பட படப்பிடிப்பில் நெப்போலியனுக்கும், விஜய்க்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தான் வளர்த்துவிட்ட பையன் சிவகார்த்திகேயன் தன்னை தாண்டி போய்விட்டார், அனிருத்தையும் தன்னிடமிருந்து பிரித்து சென்றுவிட்டார் என்கிற கோபத்தில் இருக்கும் தனுஷ் எஸ்.கே.வுடன் இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை.

அதேபோல், ரஜினி – கமல் போல போட்டி நடிகர்களாக பார்க்கப்படும் தனுஷ் – சிம்புவும் கூட சினிமாவில் இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை. அதேபோல், சில காரணங்களால் ரஜினி மீது கோபத்தோடு இருக்கும் சத்தியராஜ் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top