கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த கேப்டன் இவர்தான் – ரசிகர்கள் கருத்து !

Published On: December 29, 2019
---Advertisement---

e91f80d112c0e2476663edcc6ed4497c

கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் யார் என்ற ஐசிசியின் கேள்விக்கு ரசிகர்கள் இந்திய முன்னாள் கேப்டன் தோனியை தேர்வு செய்துள்ளனர்.

கிரிக்கெட் உலகின் கடந்த தசாப்தத்தின் (2010- 2019) ஆண்டுக்கான சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை ஐசிசி தனது டிவிட்டர் தளத்தில் எழுப்பியது. இதற்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்க அதன் முடிவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்த முடிவில் இந்திய முன்னாள் கேப்டன் தோனியையே ரசிகர்கள் அளவில் தேர்வு செய்துள்ளனர். தோனியின் தலைமையில் இந்திய அணி 2007 டி 20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 2014 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 அந்தஸ்து ஆகிய சாதனைகளைப் படைத்தது குறிப்பிடத்தகக்து.

Leave a Comment