More

விஜயின் சொகுசு கார் வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விஜய் 2012ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார் செய்தார். இந்த காருக்கு செலுத்தும் நுழைவு வரி தொடர்பாக விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் ரூ.1 லட்சம் அபாரதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த அபாரத தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertising
Advertising

அதோடு, திரைப்படங்களில் சமூக நீதிக்கு பாடுபடுவது போல் நடிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோவாக இருக்க கூடாது எனவும் நீதிபதி அறிவுரையும் செய்தார். இதையடுத்து, விஜயை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். நாம் தமிழர் சீமானும் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.இதையடுத்து தன்னை பற்றி நீதிபதி வைத்த விமர்சனத்திற்கு எதிராக விஜய் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்நிலையில், விஜயின் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.  தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. எனவே, இன்னும் சில நாட்களில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Published by
adminram

Recent Posts