சூரசம்ஹாரம் படத்தில் நடிக்க கமலை சம்மதிக்க வைத்தது எப்படி? இயக்குனர் சொன்ன ரகசியம்

1988 ல் வெளியான படம் சூரசம்ஹாரம். படத்தை சித்ரா ராமு தயாரித்தார். படத்தை சித்ரா லட்சுமணன் இயக்கினார். படத்தில் கமல், நிரோஷா, நிழல்கள் ரவி, பல்லவி, மாதுரி, கிட்டி, ஜனகராஜ், கேப்டன் ராஜூ, ராஜ்யலட்சுமி, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்துள்ளது.

இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா. கமல் ஏஜிபி அதிவீரபாண்டியன் என்ற கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். படத்தில் ஆடும் நேரம் இதுதான், நான் என்பது நீ அல்லவோ, நீல குயிலே, சோலை குயிலே, வேதாளம் வந்திருக்குது ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

இவற்றில் முதல் 3 பாடல்களைக் கங்கை அமரன் எழுதியுள்ளார். கடைசி பாடலை இளையராஜா எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே படம் தெலுங்கில் போலீஸ் டைரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

சூரசம்ஹாரம் படத்தில் நடிக்க கமலுக்கு ஒன்லைன் மட்டும் சொன்னீர்களா அல்லது முழு கதையும் சொன்னீர்களா என நேயர் ஒருவர் கேட்டதற்கு தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான்.

சூரசம்ஹாரம் படத்தில் கமல் நடிப்பதற்கு முன்னால ஒரு வரியிலும் அவருக்குக் கதையை சொல்ல வில்லை. முழு கதையையும் அவருக்கு சொல்ல வில்லை. படத்தின் கதையைப் பற்றி ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் நானும் கமலும் பேசிக்கொண்டு இருந்தோம். அவ்வளவு தான் என்றார்.

இந்தப் படத்தில் அப்போதே போதைப்பொருள் கடத்தல் பற்றி அருமையாக எடுத்து இருப்பார்கள். தற்போது வந்த கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களுக்கு எல்லாம் இது முன்னோடி என்றே சொல்லலாம்.

கமலைப் பொருத்தவரை எந்த ஒரு விஷயத்தையும் முன்பே செய்து விடுவார். தற்போது லோகேஷ் கனகராஜின் படங்களில் எல்லாம் போதைப் பொருள் கடத்தல் பற்றி தான் பெரும்பாலும் காட்டப்படுகிறது. ஆனால் அப்போதே போதைக் கடத்தல் கும்பலுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் வீரதீர சண்டையை மையமாகக் கொண்டு எடுத்திருப்பார்கள்.

Related Articles
Next Story
Share it