
ஆன்மிக அரசியலுக்கு வருவேன் என அறிவித்திருந்தாலும், ரஜினி இன்னும் தனது அரசியல் கட்சியை துவங்கவில்லை. தற்போது அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். வருகிற 2021 பொதுத்தேர்தலில் அவரின் கட்சி போட்டியிடும் என ஏற்கனவே அவர் அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், தனது குடும்பத்திற்கு செய்ய வேண்டியதை அவர் தற்போது செய்து வருகிறார். ஏற்கனவே, 2 மகள்கள் மற்றும் மனைவிக்கு செட்டில் செய்து விட்ட அவர் தற்போது பேரன்களுக்கும் செட்டில் செய்துள்ளாராம். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என 2 மகன்கள் இருக்கின்றனர். அதேபோல், சௌந்தர்யாவுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
இந்த மூன்று பேரன்களுக்கும் தலா ரூ.25 கோடியை ரஜினி பிக்சட் டெபாசிட் செய்துள்ளார் எனவும், குறிப்பிட்ட சில வருடங்கள் கழித்து அது ரூ.90 கோடியாக மாறும் எனக்கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ.100 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



