">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
60 கோடிய வச்சு எப்படி படம் எடுப்பது – ஆழ்ந்த யோசனையில் முருகதாஸ்!
விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பை மிகவும் சிக்கனமாக நடத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார் முருகதாஸ்.
விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பை மிகவும் சிக்கனமாக நடத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார் முருகதாஸ்.
விஜய்யின் 65 ஆவது படத்தை முருகதாஸ் இயக்க இருப்பதும், அதற்கு தமன் இசையமைக்க இருப்பதும் உறுதியாகியிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக அந்த படத்தைத் தொடங்குவதில் சில சிக்கல்கள் எழுந்தன. இந்நிலையில் படத்தைத் தயாரிக்க இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த படத்தின் பட்ஜெட்டை 180 கோடியில் இருந்து 130 கோடியாக குறைக்க சொல்லி வற்புறுத்தியது.
முதலில் அதற்கு தயங்கிய விஜய்யும் முருகதாஸும் இப்போது நிலைமையை புரிந்துகொண்டு அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்யின் சம்பளம் 70 கோடி போக 60 கோடியை முருகதாஸிடம் கொடுத்து பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து தர சொல்லியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில்தான் அவர் எல்லோருக்கும் சம்பளம் கொடுத்து படப்பிடிப்பை நடத்தவேண்டும்.
அதனால் தன்னுடைய சம்பளத்தில் ஒரு பெரும்பகுதி துண்டு விழும் என்பதால் படத்தை எப்படியாவது சிக்கனமாக எடுத்து விடவேண்டும் என முருகதாஸ் திட்டம் தீட்டி வருவதாக சொல்லப்படுகிறது.