விஜய்யுடன் நடித்ததால் அவருடைய ரசிகையாக மாறிவிட்டேன்: பிரபல நடிகை

b3ad313702f5f479e80766233febdd31-2

விஜய்யுடன் நடித்ததால் அவருடைய ரசிகையாகவே மாறிவிட்டேன் என பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் தற்போது லண்டனில் இருந்தாலும் அவர் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் கூறியபோது ’தளபதி 64 படத்தில் நடிப்பதற்கு முன்னர் விஜயை பற்றி தனக்கு அதிகமாக தெரியாது என்றும், ஆனால் இந்த படத்தில் அவருடன் நடித்த போது அவருடைய எளிமை மற்றும் அவருடைய நல்ல குணங்களை தெரிந்து கொண்டதாகவும், அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களின் இருப்பது ஏன் என்பது அப்போதுதான் தனது தெரிந்ததாகவும் கூறினார்

மேலும் விஜய்யுடன் நடிக்கும் போது அவருடைய தொழில் பக்தி, காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக அவர் எடுத்து கொண்ட முயற்சி ஆகியவற்றைக் கண்டு ஆச்சரியமடைந்து அவருடைய ரசிகையாகவே மாறிவிட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

c2400a3225290ee7479744efac57eb3c

மேலும் இந்த படத்தில் தான் நடித்து வரும் கேரக்டர் பற்றி ஒரு வார்த்தை கூட தன்னால் கூற முடியாது என்றும் அந்த அளவுக்கு தன்னுடைய கேரக்டரில் ஆச்சரியம் கலந்த இருக்கும், இந்த படத்தில் ரசிகர்கள் தன்னை திரையில் பார்க்கும் போது வித்தியாசமாக உணர்வார்கள் என்றும் நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார். நடிகை ஆண்ட்ரியாவின் இந்தப் பேட்டி இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Related Articles

Next Story