More

எத்தனையோ மேட்ச் விளையாடி இருக்கேன்… ஆனா இதுதான் பெஸ்ட் – சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பின் கோலி!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டி 20 போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் வீச முடிவு எடுக்கபப்ட்டுள்ளது.

Advertising
Advertising

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு நான்காவது டி20 போட்டி இன்று  வெல்லிங்டன் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற. நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் மோசமாக சொதப்பியது. இதையடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் முன்றோ மற்றும் விக்கெட் கீப்பர் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதனால் எளிதாக அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்று நினைக்க, கடைசி கட்டத்தில் சொதப்ப ஆரம்பித்தது. கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

ஆட்டத்தை மாற்றும் விதமாக கடைசி ஓவரை வீசிய தாக்கூர் ராஸ் டெய்லர், டிம் செய்ஃபெர்ட் மற்றும் மிட்செல் ஆகியோரை அவுட் ஆக்கினார். இதனால் பரபரப்பான சூழல் உருவானது. கடைசி பந்தில் 2 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற இக்கட்டான சூழல் உருவாக சாண்ட்னர் பந்தை அடித்து விட்டு இரு ரன்கள் ஓட முயல இரண்டாவது ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனால் போட்டி டை ஆக இன்றைய போட்டியிலும் சூப்பர் ஓவர் வீச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. போன போட்டியை போலவே இந்த போட்டியிலும் கடைசி நேர சொதப்பலால் நியுசிலாந்து அணி வெற்றி வாய்ப்பை மயிரிழையில் விட்டுள்ளது.

அதன் பின் நடந்த சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து 12 ரன்கள் சேர்க்க, பின்னர் வந்த இந்திய அணியில் ராகுல் முதல் 2 பந்துகளில் சிக்சரும் பவுண்டரியும் அடித்து அவுட் ஆக அடுத்து வந்த கோலி மிச்ச ரன்களை சேர்த்து வெற்றி பெறவைத்தார். கடந்த இரு போட்டிகளிலும் சூப்பர் ஓவரில் வெற்றி  பெற்ற இந்திய அணியின் கேப்டன் கோலி ‘இதற்கு மேல் விருவிருப்பான போட்டியை நாம் காணமுடியாது. எத்தனையோ போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் இதுதான் பெஸ்ட்.. ஒரு பார்வையாளராகவும்… ஒரு ரசிகனாகவும்’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts