More

7 வயசுல இருந்தே படம் பார்க்கிறேன்! நடிகரைப் பார்க்க 140 கி.மீ நடந்தே வந்த ரசிகர்

டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விக்டர் வெங்கடேஷ். தமிழில் அசுரன் படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க நரப்பா என்ற பெயரில் தயாராகியிருக்கிறது. விரைவில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. 

Advertising
Advertising

இந்தநிலையில், தெலங்கானாவின் விக்ராபாத் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்ற ரசிகர் வெங்கடேஷைப் பார்க்க சொந்த ஊரிலிருந்து 140 கி.மீக்கும் அதிகமான தூரம் நடந்தே ஹைதராபாத்தின் ராமநாயுடு ஸ்டூடியோவுக்கு வந்திருக்கிறார். ஆனால், அவர் வந்த நேரம் வெங்கடேஷ் வெளியூர் படப்பிடிப்புக்குச் சென்றிந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

வெங்கடேஷின் வெறித்தன ரசிகர் நான் என்று சொல்லும் ஸ்ரீனிவாஸ், 7 வயது முதலே வெங்கடேஷ் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் சிலாகித்திருக்கிறார். சமீபத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் வருண் தேஜ் ஆகியோரின் ரசிகர்கள் 100 கி.மீ தூரத்துக்கும் மேல் நடந்தே அவர்களைப் பார்க்க ஹைதராபாத் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram