">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அவருக்காக ஒரு வருடம் காத்திருந்தேன் – சோக கதை சொன்ன நயன்தாரா!
கோலிவுட்டின் சர்ச்சை காதல் ஜோடியான நயன்தாரா- பிரபு தேவா சுமார் 11 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்று சேரவுள்ளதாக செய்தி வெளியாகி தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தன் யூடியூப் சேனலில் பிரபு தேவா இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா மார்க்கெட் நடிப்பில் உச்சத்தை தொட்ட அளவிற்கு பல்வேறு சர்ச்சைகளையும் அதற்கு ஈடாக சந்தித்துள்ளார். குறிப்பாக அவரது முக்கோண காதல் ஊரறிந்த உண்மை. நயனின் முதல் காதலரான சிம்புவுடன் நெருக்கமாக இருந்த லிப்லாக் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதையடுத்து அந்த காதல் பிரேக்அப் ஆகிவிட பின்னர் விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான பிரபுதேவாவை காதலிக்க துவங்கினார். பிரபு தேவாவின் மனைவி இதை ஊர் முழுக்க அம்பலப்படுத்தி நயன்தாரவை அசிங்கப்படுத்தியதால் அந்த காதலையும் முறித்துக்கொண்டார் நயன். பின்னர் தற்போது விக்னேஷ் சிவனுடன் தீவிர காதலில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா பிரபு தேவாவை காதலித்துக்கொண்டிருந்த போது எந்த படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்தார் . அதற்கு காரணம், நயன் பிரபு தேவாவை திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டு அதற்காக ஒருவருடம் காத்திருந்தாராம். ஆனால், அவருக்கு நடந்ததோ வேறு… இதனால் மனமுடைந்து போன நயன் எல்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு சினிமாவில் புது அவதாரமெடுத்து தொடர் வெற்றிகளை குவித்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார்.