">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நான் பெற்றோரிடம் செல்ல விரும்புகிறேன் : அந்தர் பல்டி அடித்த இளமதி: மனதை மாற்றியது யார்?
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேவுள்ள கவுந்தபாடியை சேர்ந்த செல்வன், குருப்பநாயக்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இதில் இளமதி வன்னியர் என்றும், செல்வன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.�
இதையடுத்து, இளமதி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையொட்டி வீட்டிலிருந்து வெளியேறிய இளமதி, செல்வனுடன் சேலம் வந்தார். இந்த ஜோடிக்கு திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் திருமணம் செய்து வைக்க முன் வந்தனர். காவலாண்டியுரில் இவர்களுக்கு திராவிடர் விடுதலை கழக உறுப்பினர் ஈஸ்வரன் உள்ளிட்ட சிலர் திருமணம் செய்து வைத்தனர்.
அப்போது அங்கு வந்த 40க்கும் மேற்பட்டோர் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடியை கடுமையாகத் தாக்கினர். அதன்பின் இளமதியை அந்த கும்பல் கடத்திச் சென்றுவிட்டது. இதனையடுத்து, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து இளமதியை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் #இளமதி_எங்கே என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வந்தனர். மேலும், இது குறித்து திமுக எம்.பி. செந்தில்குமார் மக்களவையில் பேசினார்.
இந்நிலையில், கடத்தப்பட்ட இளம்பெண் இளமதி சேலம் மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் இன்று மாலை வழக்கறிஞருடன் ஆஜரானார். அப்போது, தான் தனது பெற்றோருடன் செல்ல விரும்பவதாக வாக்குமூலம் அளித்தார். அப்போது, அவரிடம் திராவிட விடுதலை கழக நிர்வாகிகள் அவரிடம் பேச முயன்றனர். ஆனால், தான் யாரிடமும் பேச விரும்பவில்லை என தெரிவித்தார். அவரை வருகிற 16ம் தேதி திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி அவரை பெற்றோருடன் அனுப்புவது குறித்து போலீசார் முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.
இதற்கிடையில், காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது கடத்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக எதிரொலித்துள்ளது.
இளமதியை மிரட்டி அவரின் பெற்றோர் அவரின் மனதை மாற்றி காவல் நிலையத்தில் அப்படி சொல்ல வைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.