வேணாம்.. வலிக்குது.. அழுதிடுவேன்…. தெறித்து ஓடும் சின்மயி….

Published On: December 30, 2019
---Advertisement---

e3ef3661634f36e010ac12d8f6f12ff5

அவருக்கு ஆதரவாக அவரின் கருத்தை அவரின் தாயார் பத்மஷ்னியும் ஆதரித்திருந்தார்.  அந்த சம்பவத்திற்கு பின்னும் தற்போது வரைக்கும் சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியன் வன்கொடுமைகள் பற்றி பேசி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற சின்மயியின் தாய் பத்மஷ்னி ‘தேவதாசி முறை ஒட்டு மொத்த பாரத தேசத்துக்கும் சொந்தமானது. அது எப்பேர்பட்டது தெரியுமா? அதை இல்லாமல் செய்த பெரியாரை நான் எப்போதும் மன்னிக்க மாட்டேன்’ என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நெட்டிசன்களும் பலரும் அவருக்கு எதிராக சின்மயியின் டிவிட்டர் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர். தேவதாசி முறை புனிதமானது எனில் அவர் தனது மகள் சின்மயியை தேவதாசி ஆக்கலாமே என்கிற ரேஞ்சில் திட்ட, என் தாய் கூறியதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அவரின் கருத்தை நான் எதிர்க்கிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்கிறேன் என சின்மயி கூறியும் நெட்டிசன்கள் அவரை விடவில்லை. 

ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த சின்மயி ‘நான் வைரமுத்து மீது புகார் கூறிய போதும் எனக்குதான் திட்டு.. இப்ப எங்கம்மா தப்பா பேசினதுக்கும் எனக்கு திட்டு. இது என்ன நியாயம்’ என அழும் நிலைக்கு வந்துவிட்டார். 

இதுஒருபுறம் எனில் ஒரு சிலர் அவரின் தாய் பேசியதற்காக ஏன் அவரை திட்ட வேண்டும் எனவும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment