நான் காப்பி அடிச்சேன்னு இப்பதான் கண்டு பிடிச்சிருக்கான்!.. இளையராஜா கோபம்!..

by சிவா |
நான் காப்பி அடிச்சேன்னு இப்பதான் கண்டு பிடிச்சிருக்கான்!.. இளையராஜா கோபம்!..
X

Ilayaraja: கடந்த 50 வருடங்களாக தனது பாடல்களால் பலரையும் கட்டிப்போட்டவர்தான் இளையராஜா. 80களில் மிகவும் அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்த நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருந்தார். இளையராஜா வந்த பின் எம்.வி.விஸ்வநாதனின் மார்க்கெட்டை குறைந்து போனது. எம்.எஸ்.வி இசையமைத்துக்கொண்டிருந்த போது பல ஹிந்தி பாடல்கள் தமிழ்நாட்டிலேயே பிரபலம் ஆனது.

பலரும் ஹிந்தி பட கேசட்டுகளை வாங்கி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த நிலையை இளையராஜா மாற்றினார். ராஜாவின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. 80களில் ராஜாவின் இசையை நம்பியே 90 சதவீத திரைப்படங்கள் உருவாகியது. அவரின் எல்லா பாடல்களுமே ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

ஏ.ஆர்.ரஹ்மான்: இளையராஜா வந்த பின்னர்தான் ஆடியோ கேசட்டுகள் அதிகம் விற்பனை ஆனது. பல திரைப்படங்களை தனது இசையால் வெற்றி பெறவைத்தார் இளையராஜா. 90களில் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா போன்ற புது இசையமைப்பாளர்கள் வந்தபின் இளையராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தது.

ஆனாலும், தொடர்ந்து இசையமைத்து வந்தார். இளையராஜாவை பிடித்த பல இயக்குனர்கள் அவரிடம் போனார்கள். சினிமாவில் இசையமைத்து வந்தாலும் தொடர்ந்து பல ஊர்களிலும் இசை நிகழ்ச்சியையும் அவர் நடத்தி வருகிறார். மேலும், வெளிநாடு சென்று சிம்பொனி இசையையும் அமைத்திருக்கிறார்.

இளையராஜா பேட்டி: கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது அவர் மீது வைக்கப்பட்ட பல விமர்சனங்களுக்கும் பதில் சொல்லியிருக்கிறார். எனக்கு தலைக்கணம் அதிகம், திமிரு பிடித்தவர் என்றெல்லாம் பேசுகிறார்கள். எனக்கு தலைக்கணம் இல்லாமல் வேறு யாருக்கு இருக்கும். எனக்குதான் திமிறு அதிகம் இருக்கும். உண்மையில் எனக்கு திமிறு இல்லை. என்னை சொல்கிறான் என்றால் அவனுக்குதான் திமிறு அதிகம். யாரும் செய்யாததை நான் செய்திருக்கிறேன். எனக்கு திமிறு இருந்தால் அது சரிதான்’ என விளாசினார்.

மேலும், நான் காப்பி அடிச்சி பாட்டு போட்டிருக்கேன்னு 50 வருசம் கழிச்சி கண்டுபிடிச்சிருக்கான். இப்படியெல்லாம் மியூசிக் இருக்குன்னு உனக்கு நான் காட்டி இருக்கேன்டா.. 50 வருஷத்துக்கு முன்னாடி இப்படியெல்லாம் இசை இருக்குன்னு உனக்கு தெரிஞ்சதா?’ என சீறியிருக்கிறார் இசைஞானி.

Next Story