More

சிவகார்த்திகேயன் பாட்டைப் பாடிய இளையராஜா – சம்மதித்தது எப்படி ?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் ஒரு பாடலை இளையராஜா பாடியுள்ளார்.

Advertising
Advertising

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹிரோ திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடியுள்ளார்.

வழக்கமாக இளையராஜா தான் இசையமைக்கும் பாடல்களை மட்டுமே பாடுவார். பிற இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு பாடுவதில்லை. ஆனால் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு மட்டும் இந்த நிபந்தனை பொருந்தாது. அவர் இசையில் பட்டியல், சர்வம், மாரி 2 ஆகிய படங்களுக்குப் பாடியுள்ளார். அதையடுத்து இப்போது ஹீரோ படத்தின் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts