">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அப்படிப்போடு! ஸ்டேஷனில் இருந்த மது பாட்டில்கள் ; அள்ளிக் குடித்த காவலர்கள் – சென்னையில் சுவாரஸ்யம்
ஊரடங்கு உத்தரவில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை திருடி குடித்து வந்த 2 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவாமல் இருக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்குகள் மூடப்பட்டுள்ளது. ஆனாலும், கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்களை கைது செய்வதோடு, மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதுபோல் புது வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டிகள் அப்பகுதி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை உயர் அதிகாரிகள் சோதனை செய்த போது பறிமுதல் செய்யப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களில் சுமார் 50 குவார்ட்டர் பாட்டில்கள் காணாமல் போயிருந்தது.
விசாரணையில் 14ம் தேதி இரவு பணியில் இருந்த முருகவேல்(54) மற்றும் முத்துசாமி(36) ஆகிய காவலர்களும் மதுவை குடித்து வந்தது தெரியவந்தது. அதோடு, அவர்களுக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் அரவிந்த் என்பவர் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவலர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதோடு, அவர்கள் மீது திருட்டு வழக்கையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
போலீசாரே மதுபாட்டில்களை திருடி குடித்த சம்பவம் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.