வாரிசு பட வசூலில் பொய் கணக்கு?!.. தில் ராஜூவை கைது செய்த வருமான வரித்துறை அதிகாரிகள்!..

Dil Raju: அரசியல், சினிமா இந்த இரண்டிலுமே கருப்பு புணம் அதிகமாக புழங்கும். அரசியல்வாதிகள் லஞ்சம் மற்றும் கமிஷன் பெற்று கொள்ளையடித்து அதை மற்றொருவரின் (பினாமி) பெயரில் சொத்தாக மாற்றி வைத்திருப்பார்கள். பினாமிகளின் பெயரில் பல தொழில்களும் முதலீடு செய்திருப்பார்கள். இதுபோக பல ஆயிரம் கோடிகளை சுவிஸ் பேங்கில் டெப்பாசிட் செய்து வைத்திருப்பார்கள்.
கருப்பு பணம்: சினிமாவை பொறுத்தவரை பல நடிகர்களும் முழு சம்பளத்தையும் கணக்கில் காட்டமாட்டார்கள். அப்படி காட்டினால் அதற்கு முழுமையாக வரி கட்ட வேண்டும். எனவே, சம்பளத்தில் பாதியை செக்காக வாங்கி வங்கியில் செலுத்திவிட்டு அதுதான் சம்பளம் என கணக்கு காட்டி அதற்கு மட்டும் வரி காட்டுவார்கள். சம்பளத்தில் மீதியை பணமாக வாங்கி பதுக்கி வைப்பார்கள். அல்லது பினாமி பெயரில் படம் தயாரிப்பார்கள். சொத்து சேர்ப்பார்கள். இதைத்தான் கருப்பு பணம் என சொல்வார்கள்.
வருமான வரி: கமல், அஜித் ஆகிய இருவரை தவிர பெரும்பாலான நடிகர்கள் இதைத்தான் செய்து வருகிறார்கள். நடிகர்களே இப்படியெனில் அவர்களை வைத்து பல கோடிகளை கொட்டி படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் எப்படி உண்மையான கணக்கை காட்டுவார்கள்?.. படம் பல நூறு கோடிகளை வசூலித்தாலும் ‘இந்த படத்தில் எனக்கு நஷ்டம்தான்’ என பொய்க்கணக்கு காட்டுவார்கள். அப்படி தொடர்ந்து செய்து வரி கட்டுவதிலிருந்து தப்பிவிடுவார்கள்.
இப்போதெல்லாம் படத்தை புரமோஷன் செய்யவே எவ்வளவு வசூல் என தயாரிப்பு நிறுவனங்களே டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள். அதிலும் பலரும் பொய்யான தகவல்களை சொல்வார்கள். வருமான வரித்துறையினர் சோதனை செய்தால் மட்டுமே இது தெரியவரும்.
தில் ராஜு: ஆந்திராவில் தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வருபவர் தில் ராஜூ. விஜய் நடித்த வாரிசு, ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் போன்ற படங்களின் தயாரிப்பாளர் இவர். கேம் சேஞ்சர் படம் 450 கோடி செலவில் உருவானதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான், கடந்த 2 நாட்களாக தில் ராஜுவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
வாரிசு வசூல்: அதில் வாரிசு படம் உலகம் முழுவதும் 120 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கணக்கு காட்டப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது உண்மையில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சில நாட்களுக்கு முன்பு வாரிசு படம் ஆந்திராவில் எனக்கு நஷ்டம் என தில் ராஜுவே சொல்லியிருந்தார் என செய்திகள் வெளியானது. தற்போது அவரை கைது செய்து வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு அவரிடம் தொடர் விசாரணை நடக்கும் என சொல்லப்படுகிறது.
தில் ராஜு மட்டுமல்ல. புஷ்பா 2 படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.