More

இந்தியன் 2 பஞ்சாயத்து பேசி முடியல.. நீங்களே ஒரு முடிவு சொல்லுங்க… நீதிமன்றத்தில் ஷங்கர் பதில்…

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் 2 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. 70 சதவீத காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கமல்ஹாசனுடன் சம்பள பிரச்சனை என பல பஞ்சாயத்துக்களால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஷங்கர் பல மாதங்கள் காத்திருந்தும் லைக்கா பச்சைக்கொடி காட்டாததால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. எனவே, அவர் வேறு படங்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படமும், அதன்பின் அந்நியன் 2 ஹிந்தி ரீமேக் என 2 படங்களை அவர் இயக்கவுள்ளார்.

Advertising
Advertising

இதைத்தொடர்ந்து, இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு ஷங்கர் வேறு திரைப்படங்களை இயக்க செல்ல வேண்டும் என நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. எனவே, லைக்காவும், ஷங்கரும் பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்ட முடியவில்லை என ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியன் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என தன்னை நிர்பந்திப்பதாகவும், தான் அக்டோபர் மாதத்திற்குள் முடித்துக்கொடுக்கிறேன் என கூறியதாகவும், அதை லைக்கா ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எனவே, நீதிமன்றமே ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணை ஜூலை மாதம் துவங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published by
adminram

Recent Posts