தமிழ் சினிமா வரலாற்றில் இது முதன்முறை!.. ஹாலிவுட் பாணியில் வெளியாகும் இந்தியன் 2....

by ராம் சுதன் |

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதியான நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. முதல் படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார் கமல். முதல் பாகத்தில் மகன் சந்துரு இறந்துவிடுவது போலவும், இந்தியன் தாத்தா சேனாதிபதி வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடுவது போலவும் படத்தை முடித்திருப்பார் ஷங்கர்.

முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் இந்தியன் 2-வுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் சுமாராக இருக்கிறது. இன்னும் 6 மாதங்களில் இந்தியன் 3 படமும் வெளியாகவுள்ளது. இந்தியன் 3 படத்தில் தனது கதாபாத்திரம் சிறப்பாக இருப்பதாக கமலே பல மேடைகளிலும் சொல்லிவிட்டார்.

இந்தியன் 3-யில் சேனாதியின் அப்பா வேடத்தில் கமல் நடித்திருக்கிறார். இந்த படத்தை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். நாளை இந்தியன் 2 படம் வெளியாகவிருப்பதால் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. ஒருபக்கம், தமிழ் சினிமாவில் முதன் முறையாக இந்தியன் 2 படம் ஒரு சாதனையை செய்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து ஐமேக்ஸ் திரையரங்கிலும் நாளை இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அப்படி சுமார் 24 ஐமேக்ஸ் தியேட்டர்களில் வெளியாகும் இந்தியன் 2 ஒரு வாரம் ஹவுஸ்புல்லாக ஓடினால் அதுமட்டுமே 25 கோடியை வசூல் செய்துவிடும் என சொல்லப்படுகிறது.

அதோடு, பொதுவாக தமிழ் படங்கள் ஒரு ஃபார்மேட்டில் மட்டுமே ரிலீஸ் ஆகும். ஆனால், இந்தியன் 2 IMAX, 2D, IQ, ஐஸ், 4XP, EPIC என 6 ஃபார்மேட்டில் இப்படம் வெளியாகவுள்ளது. சில ஆங்கில படங்கள் இப்படி வெளியாகி இருந்தாலும் இப்படி முதல் படமாக இந்தியன் 2 படம் வெளியாகவிருக்கிறது.

எனவே, நல்ல தியேட்டர்களில் பார்த்தால் இந்தியன் 2 படம் ரசிகர்களுக்கு சிறத அனுபவத்தை கொடுக்கும் என்றே சொல்லப்படுகிறது. ஒருபக்கம், சென்னை போன்ற நகரங்களில் இந்தியன் படத்திற்கு டிக்கெட் விலை ரூ.190 ஆக நிர்ணயம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Next Story