சூடு பிடிக்கும் இந்தியன் 2 ஆன்லைன் புக்கிங்!.. இந்த ரேஞ்சில போனா லைக்காவுக்கு கொல குத்துதான்!..

by ராம் சுதன் |

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா என பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் இந்தியன் 2. இப்படத்தின் முதல் பாகம் 1996ம் வருடம் வெளியானது. 28 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

எனவே, இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் இயக்குனர் ஷங்கர், சித்தார்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பிசியாக இருக்கிறார்கள். இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி இருக்கிறது. இதில் தமிழ் மொழிக்கு ஏற்கனவே சென்சார் ஆகிவிட்ட நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிக்கு இன்று சென்சார் கிடைக்கவுள்ளது.

மிகவும் அதிகமான பட்ஜெட்டில் இப்படத்தை லைக்கா நிறுவனம் உருவாக்கி வருகிறது. எஸ்.ஜே.சூர்யா தங்கி இருக்கும் வீடு செட் மட்டும் ரூ.8 கோடி என சொல்லப்படுகிறது. அப்படி எனில் மற்ற காட்சிகளுக்கு ஷங்கர் எவ்வளவு செலவு செய்திருப்பார் என யோசித்து பாருங்கள். இந்த படத்தில் ஆர்ட் டைரக்‌ஷன் முக்கிய பங்காற்றி இருக்கிறது.

இந்த படத்திற்காக பல அருமையான செட்களை போட்டிருக்கிறார்கள். கண்டிப்பாக செட் மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. லைக்கா கடந்த சில வருடங்களாலேயே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதனால்தான் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கூட சரியாக நடக்காமல் இருந்தது.

ஒரே நேரத்தில் இந்தியன் 2, விடாமுயற்சி, வேட்டையன் என 3 பெரிய படங்களை தயாரித்து வந்ததால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் லைக்கா திணறியது. தற்போது ஒருவழியாக அதிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இந்தியன் 2 படம் வருகிற 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில்தான், இந்தியன் 2 படத்தின் ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாட்டுக்கான ஆன்லைன்புக்கிங் துவங்கி இருக்கிறது. இது எதிர்பார்த்ததை விட அதிக அளவுக்கு இருப்பதால் லைக்கா மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. படம் நன்றாக இருப்பதாக ஏற்கனவே படத்தை பார்த்த சில முக்கிய புள்ளிகள் இணையத்தில் சொல்லி வரும் நிலையில் இந்தியன் 2 படம் நல்ல வசூலை பெற்றால் லைக்கா நிறுவனத்திற்கு பல கோடிகள் லாபம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Next Story