More

படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம் என்பது உண்மையா? உறுதி செய்த புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன

Advertising
Advertising

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் இதுகுறித்து கவலையைப் பகிர்ந்து கொண்ட நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளிவந்துள்ள புகைப்படம் இது குறித்த உண்மையை விளக்கி உள்ளது 

இது குறித்து படப்பிடிப்புக்கு குழுவினர்களில் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டு கூறியபோது, ‘ரஜினிக்கு மிகச் சிறிய காயம் தான் ஏற்பட்டது என்றும் ரசிகர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் அந்த காயம் ஐந்து நிமிடத்தில் சரியாகி விட்டது என்றும் கூறியுள்ளார்

மேலும் ஆவணப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ரஜினி பத்திரமாக சென்னை திரும்பி விட்டதாகவும் அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார் இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

மேலும் வனத்துறை அதிகாரிகளுடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram

Recent Posts