More

நேரடி ஒளிபரப்புன்னு சொன்னது பொய்யா? – லீக் ஆகும் மாஸ்டர் புகைப்படங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருப்பவர்களுக்கு விஜய் வணக்கம் வைக்கும் வீடியோவும், மேடையில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி மற்றும் தாய் ஷோபா ஆகியோரை விஜய் கட்டி அணைக்கும் காட்சிகளும், நடிகர் சிம்ரன் மேடையில் நடனமாடும் காட்சிகளும் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

அப்படி எனில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு என வெளியான செய்தி பொய்யா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. வெளியாகும் புகைப்படங்களை பார்க்கும் போது  நிகழ்ச்சி முடிந்த பின், இசை வெளியீட்டு நிகழ்ச்சியை மட்டுமே சன் தொலைக்காட்சியில் காட்டுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஏற்கனவே எடுத்த முடித்த காட்சிகளை லைவ் என்கிற பெயரில் வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது.

Advertising
Advertising

லைவ் எனக்கூறிவிட்டு நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வருவது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

Published by
adminram

Recent Posts