More

இயக்குனர் ஜனநாதன் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழில் இயற்கை, பேராண்மை, ஈ, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஜனநாதன். கம்யூனிச சிந்தாந்த்தில் ஈடுபட்டுள்ள அவர் தனது திரைப்படங்களிலும் புரசிகரமான கருத்துக்களை பிரதிபலித்து வந்தார். தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘லாபம்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

நேற்று ஜனநாதன் நேற்று சுயநினைவின்றி தனது வீட்டில் மயங்கி கிடந்தார். அதைக்கண்ட அவரின் உதவியாளர்கள் அவரை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்கள் முடிவெடுத்தனர். தற்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்லது.

இந்த செய்தி தமிழ் திரை உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts