கமல் முன்னாடி என்னால நடிக்க முடியாது...சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ண பிரபலம்

by ராம் சுதன் |
கமல் முன்னாடி என்னால நடிக்க முடியாது...சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ண பிரபலம்
X

நான் வளர்த்து விட்ட பையன் கமல். அவன் முன்னாடி நான் நடிப்பதா என கே பாலச்சந்தர் கமல் நடித்த ஒரு படத்தில் நடிக்க மறுத்த ஒரு செய்தி தான் இப்போது வைரலாகி வருகின்றது. அது வேறு எந்த படமும் இல்லை. வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் தான். ஹிந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் ஹிட்டான இந்த படம் தமிழில் சரண் இயக்கத்தில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற பெயரில் வெளியானது.

இந்த படத்தில் கமலுக்கு அப்பாவாக நாகேஷ் நடித்திருப்பார். நாகேஷ் நடித்த அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது கே பாலச்சந்தர். இதைப் பற்றி சரணிடம் சொன்னபோது சரணுக்கு ஒரே சந்தோஷம். ஏனெனில் அவரிடம் உதவியாளராக இருந்தவர் தான் இயக்குனர் சரண். தன் ஆசானை இயக்கும் ஒரு வாய்ப்பு தனக்கு கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் இருந்திருக்கிறார். அதுவும் பாலச்சந்தர் நடிப்பாரா என்ற ஒரு சந்தேகமும் சரணுக்கு இருந்தது. இருந்தாலும் கல்கி படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் பாலச்சந்தர் நடித்திருப்பார்.

அதனால் கண்டிப்பாக இந்த படத்திலும் நடிப்பார் என நினைத்து அவரிடம் இந்தப் படத்தின் கதை பற்றி சொல்வதற்காக சென்றாராம் சரண். இதைப் பற்றி பேசும்பொழுது பாலச்சந்தர் ஏன்டா என்ன போய் நடிக்க சொல்ற என கேட்டாராம். அதுவும் இல்லாமல் கமல் முன்னாடி நான் எப்படி நடிப்பது. நான் வளர்த்து விட்ட பையன். இன்று உலகமே போற்றும் ஒரு மகா நடிகன். அவன் முன்னாடி நான் ரெண்டு டேக் வாங்கினால் நல்லாவா இருக்கும் என்று கூட யோசித்தாரா என தெரியவில்லை. அதனால் தான் என்னவோ பாலச்சந்தர் நடிக்கவில்லை என சரண் ஒரு பேட்டியில் கூறினார்.

அதன் பிறகு தான் இந்த படத்தில் நாகேஷ் கமலுக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்தப் படம் ஆரம்பத்தில் படத்தின் தலைப்புக்காக பல பிரச்சனைகளை சந்தித்தது. மார்க்கெட் ராஜா என்று தான் முதலில் டைட்டில் வைக்கப்பட்டது. அதன் பிறகு கிரேசி மோகன் வசூல் ராஜா எம் பி பி எஸ் என தலைப்பை மாற்றினார். படம் ரிலீஸ் ஆகும் போது டாக்டர்கள் சங்கம் சேர்ந்து ஒரு போராட்டம் நடத்தினார்கள். வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்றால் டாக்டர்கள் அனைவரும் வசூல் வேலையையா பார்க்கிறோம்.

இதை ஒரு சர்வீஸ் ஆக நினைத்து தானே பார்க்கிறோம் .இதை கேவலப்படுத்தும் விதமாக இந்த டைட்டில் இருக்கிறது என அந்த நேரத்தில் போராட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு அவர்களை அழைத்து படக்குழு பேசி சமாதானப்படுத்தி பிரச்சினையை சுமூகமாக முடித்து இருக்கின்றனர். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. கமலுக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஆகவும் இந்த படம் அமைந்தது. எப்பொழுது பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக இந்த படம் இருக்கிறது .பிரகாஷ்ராஜ் நடிப்பு படத்தின் போக்கையே மாற்றியது.

Next Story