விஜயகாந்த் படத்தில் டி.ராஜேந்தருடன் மோதல்...! அட ரைமிங்லயும் ஒரு டைமிங்..!

by ராம் சுதன் |

விஜயகாந்த் படத்தில் டி.ராஜேந்தர் இசை அமைத்தார் என்றால் அது கூலிக்காரன் தான். இந்தப் படத்தை இயக்கியவர் ராஜசேகர். தயாரித்தவர் கலைப்புலி எஸ்.தாணு. இவருக்கும், டி.ராஜேந்தருக்கும் படத்தின்போது சில கருத்து மோதல்கள் வந்ததுண்டு. இதுகுறித்து அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா...

அவருக்கு பிரச்சனையான காலகட்டத்துல நான் உதவியா இருந்தேன். அப்போ தாணு உன் படத்துக்கு நான் இசை அமைக்கிறேன்னாரு. ப்ரீயாவே பண்ணித்தாரேன்னாரு.

திடீர்னு பார்த்தா விளம்பரம்லாம் வர ஆரம்பிச்சிட்டு. நானும் விளம்பரத்துல பல டயலாக்கை எழுதுவேன். என்னையே தாக்குற மாதிரி. 'விளம்பரத்தால் சிலர் எழுதலாம் துடுக்கு மொழி... அவை அனைத்தும் ஆகிடுமோ ராஜேந்தரின் அடுக்குமொழி...' ஒரு தாயின் சபதம் படத்தோட விளம்பரத்துக்கு பேப்பர்ல இப்படி விளம்பரம் வருது.

உடனே வி.பி.மணி என்பவர் தலைவரே தாணு சார் உங்களுக்கு ராஜேந்தர் தான் இந்த டயலாக் எல்லாம் போட்டுருக்காருன்னாரு. அவரு சின்னதா போட்டுருந்தாரு. நான் உடனே முழு பக்கம் விளம்பரம் போட்டேன்.

'அடுக்கு மொழிக்குச் சொந்தக்காரர் அறிஞர், கலைஞர். இருவரும் பெற்றது டாக்டர் எனும் பட்டம். மற்றவர்கள் அடுக்குமொழிக்காக அடிக்கிறாரோ வீணே தம்(பட்டம்)'னு போட்டேன்.

'தன்னையே தாழ்த்திக் கொள்பவன் உயர்ந்தவன் ஆகிறான். இயேசுவின் பொன்மொழி. தன்னையே உயர்த்திக் கொள்பவன் —- ஆவான். இது தாணுவின் தனிமொழி'. அடுத்தது ராஜேந்தர், 50வது நாள் வரும்போது ஏவிஎம்ல, 'நண்பர்களாக வந்து படம் பண்ணச் சொன்னாங்க. முதுகில் குத்தும் துரோகிகளாகி விட்டாங்க'ன்னு பேட்டி கொடுத்தாரு.

'நண்பனாக நடித்து நயவஞ்சகன் என்றால் பாதகம் செய்த பதரை அடையாளம் காட்டு'ன்னு 50வது நாளில் அந்த 'பதர்' என்ற வார்த்தையை வித்தியாசமாகக் காட்டினேன். அப்புறம் ராஜேந்தர்கிட்ட இருந்து போன்.

'தாணு, என் பேரை எடுத்துட்டு பதர்'னு போடுன்னாரு. 'அப்படியில்ல ராஜூ. நீயா போட்டதுக்குப் பதில் நான் போட்டேன். நீ நினைச்சிப் பாரு. நாம எப்படி பழகிருக்கோம். என்னென்ன நாம செஞ்சிருக்கோம்? என்னென்ன காலகட்டத்துல நான் உனக்கு நின்னுருக்கேன்.

இதெல்லாம் நான் சொல்லணுமா? நீயா தான் சொன்ன நான் செஞ்சதுக்கு படம் பண்ணித் தாரேன்னு சொன்னே. இன்னிக்கு இப்படி மாறியிருக்கு. இதுக்கு நான் காரணம் இல்ல. இதுக்கு அப்புறம் நீயும் எதுவும் பண்ணாத. நானும் எதுவும் பண்ணல'ன்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் நல்லா தான் இருக்கோம். இப்பவும் நல்லா தான் பேசறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story