காமெடி பீஸா ஆக்கிடாதீங்க... கல்கி 2 விஷயத்தில் அலார்ட்டான கமல்

by ராம் சுதன் |

இந்தியன் 2 படத்தில் புதுசா மேக்கப் போடுறேன்னுட்டு இந்தியன் தாத்தாவை சொதப்பிட்டாங்க. அதனால கல்கி 1லும் கமலை அடையாளமே கண்டுபிடிக்க முடியல. அதனால கல்கி 2 விஷயத்தில் மேக்கப் விஷயத்தில் கமல் அலார்ட்டாகி விட்டார் போல. அதனால் இந்தப் படத்தில் மேக்கப்பில் புதிய முயற்சி கையாளப்பட உள்ளது. இதைப் பற்றி என்னன்னு இப்போது பார்ப்போம்.

கல்கி முதல் பாகம் நாக் அஸ்வின் இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குழந்தைகளுக்கான படம் போல பேசப்பட்டாலும் படத்தின் வசூல் 600 கோடியைத் தாண்டியது. படத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல் என 3 பெரிய ஹீரோக்கள் நடித்து இருந்தது தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலக ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது.

கல்கி 2ம் பாகத்தில் யாஸ்கின் கேரக்டர் இந்த மாதிரி தான் இருக்கும். யாஸ்கின் கேரக்டரில் கமல் வர்றாரு. சுப்ரீம் யாஸ்கின்னு ஒண்ணு இருக்கு. ஒவ்வொரு யாஸ்கினுடைய ஆதிக்கத்திலும் 7 கண்டங்கள் இருக்கு. அந்த ஒவ்வொரு கண்டத்திலும் யாஸ்கின் இருக்காரு. இவர்களில் முக்கியமான யாஸ்கின் யாருன்னா அது உலகநாயகன் கமல் தான்.

கல்கி முதல் பாகத்தில் யாஸ்கின் மேக்கப் சரி. ஆனா அடுத்த பாகத்தில் யாஸ்கின் மேக்கப் எப்படி இருக்கும்? அதை இது வரைக்கும் வடிவமைக்க முடியலையாம். அதுக்கு ஒவ்வொண்ணா போட்டுப் பார்க்குறாங்க. ஆனா எதுவுமே சரிப்பட்டு வரலையாம்.

இதுதான் முக்கியமான கட்டம். பயங்கரமாகவும் இருக்கணும். அதாவது பிரம்மாஸ்திரம் அஸ்வத்தாமனாக உள்ள அமிதாப் பச்சன் கையில் இருந்து யாஸ்கினாக உள்ள கமல் கைக்கு வருகிறது. அப்போது பிரபாஸ்சுக்கும், கமலுக்கும் இடையே பயங்கரமான சண்டை. அதுக்காக இப்போ மேக்கப் வடிவமைக்கணும். அதனால கமல் மேக்கப்பைக் கலைச்சிக் காட்டுறாரு. அந்த மேக்கப் பொருத்தவரைக்கும் போடுறதும் கஷ்டம். கலைக்கிறதும் கஷ்டம்.

எது எப்படியோ உலகநாயகனை ரசிகர்கள் பார்த்து ரசிக்கிற மாதிரி இருந்தால் சரி தான். இந்தியன் 2ல் ஃபீல் பண்ண வைத்ததால் ரசிகர்கள் ரொம்பவே சோர்வா இருக்காங்க. இந்தப் படத்திலாவது மீண்டும் அவர்களை உசுப்பி எழச் செய்ய வேண்டும் என்பதே திரை ஆர்வலர்களின் எண்ணம்.

Next Story