கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்க மறுத்த நடிகர்.. அவர்கிட்டயும் அப்ளிகேஷன் போட்டாரா லோகி?

இன்று கூலி படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகும் என நேற்றே அறிவிப்பு வந்து ஒட்டுமொத்த இணையமும் பரபரப்பாக இருந்தது. பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் இருக்கிறார் என்பதுதான் அந்த அப்டேட். ஏற்கனவே வந்த அப்டேட் ஆனாலும் பூஜா ஹெக்டேடிவின் லுக் மிகவும் ஸ்டைலிஷாக இருந்தது. அவர் இருந்த போஸ்டர்தான் இன்று வெளியானது. கூலி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடுகிறார் என்று சொல்லப்பட்டது.
ஏற்கனவே ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனமாடி இன்று வரை உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார் தமன்னா. சொல்லப்போனால் ரஜினியை விட சம்பாதிக்கும் நடிகையாக மாறினார் தமன்னா. மும்பை போன்ற வட மா நிலங்களில் நடக்கும் பெரிய பெரிய தொழிலதிபர்களின் இல்லத்திருமண விழாவிற்கோ அல்லது ஏதாவது நிகழ்விற்கோ தமன்னா அழைக்கப்பட்டால் காவாலா பாடலுக்குத்தான் நடனமாட கேட்கிறார்கள்.
இந்த ஒரு பப்ளிசிட்டியால் கூட விஜய்க்கு ஜோடியாக நடித்தாலும் பரவாயில்லை. கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறேன் என சம்மதம் சொல்லியிருப்பார் பூஜா என சொல்லப்படுகிறது. அதனால் சம்பளமும் அதிகமாகத்தான் இருக்கும் என தெரிகிறது. நாகர்ஜூனாவுக்கு இந்தப் படத்தில் 23 கோடி சம்பளம் என்று சொல்கிறார்கள். அதே போல கனடாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் உபேந்திராவும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
அமீர்கானும் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சியை ராஜஸ்தானில் படமாக்கிவிட்டார்களாம். ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த ரஜினி சத்யராஜ் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். ஸ்ருதி ஹாசன் கூலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. தங்கம் கடத்தலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது.
கடைசியாக இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க கமலையும் லோகேஷ் அணுகியிருக்கிறார். ஆனால் நாங்கள் இருவரும் பிரிந்து படம் பண்ணலாம் என்ற முடிவெடுத்த பிறகு இத்தனை ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கிறோம் என்றால் அந்தப் படம் எப்பேற்பட்ட பெரிய படமாக இருக்க வேண்டும் என சொல்லி கமல் மறுத்துவிட்டாராம்.