இந்தியன் 2 எனக்கே பயமாக இருந்தது!.. உலக நாயகன் என்ன சொல்றார் பாருங்க!..

by ராம் சுதன் |

Indian2: 1996ம் வருடம் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் படம் வெளியான நிலையில் இப்போது இந்தியன் 2 படம் வருகிற 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் மகன் சந்துருவை கொன்றுவிட்டு வெளிநாட்டுக்கு போய்விடும் சேனாதிபதி இந்தியன் தாத்தா தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியா திரும்பினால் என்ன நடக்கும் என்பதுதான் கதை.

அதாவது, முதல் பாகத்தில் தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளை களையெடுத்த சேனதிபதி இந்த படத்தில் இந்தியா முழுவதும் உள்ள ஊழல்வாதிகளை போட்டு தள்ளுவது போல திரைக்கதை அமைத்திருக்கிறார் ஷங்கர். இந்த படத்தில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், விவேக், மனோபாலா என பலரும் நடித்திருக்கிறார்கள்.

லைக்கா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதுவரை 2 பாடல்களும் வெளியானது. ஆனால், அந்த பாடல் ரசிகர்களை கவரவில்லை. இந்த படத்திற்கு அனிருத் இசை என்பது ஷங்கரின் விருப்பம் என மேடையிலேயே சொல்லிவிட்டார் கமல்.

இந்தியன் 2 படம் வருகிற 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதால் ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த் ஆகியோர் பல ஊர்களுக்கும் சென்று புரமோஷன் செய்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் 3 மொழிகளில் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், இப்படம் தொடர்பான பல செய்திகளை கமல் ரசிகர்களிடம் சொல்லி வருகிறார்.

இதற்கு முன் நான் இந்தியன் 2-வில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கே இந்தியன் 3 தான் காரணம். அதில் நான் நடித்திருக்கும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என சொல்லி இருந்தார். இப்போது ஒரு விழாவில் பேசிய கமல் ‘இந்தியன் 2-வை நாங்கள் துவங்கியபோது எல்லோரும் இது எப்படி போகிறது? என ஒரு சந்தேக கண்ணோடு பார்த்தார்கள். அது எங்களுக்கு பயமாக இருந்தது.

அதன்பின் இந்தியன்தானே நன்றாகத்தான் இருக்கும் என எல்லோரும் நினைத்தபோது எங்களின் பயம் கூடிவிட்டது. இந்தியன் 2 கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்’ என சொல்லி இருந்தார் உலக நாயகன்.

Next Story