1. Home
  2. Latest News

80களில் பட்டையைக் கிளப்பிய கமல் படங்கள்... 200 நாள்களுக்கு மேல ஓடிய லிஸ்டைப் பாருங்க..!

கமல், ரஜினி படங்கள் என்றாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். கமல் படங்கள் வெளியானால் ரஜினி படத்திற்கு சவால் விடும் வகையில் இருக்கும். அப்படித்தான் 80ஸ் படங்களும்...!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த படங்களில் 200 நாள்களைக் கடந்து ஓடியவை 24 படங்கள். அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

1977ல் 16வயதினிலே 285 நாள்கள், 1978ல் இளமை ஊஞ்சலாடுகிறது 200 நாள்கள், சிகப்பு ரோஜாக்கள் 200 நாள்கள் கடந்து ஓடி பாக்ஸ் ஆபீஸ்ல வசூலை அள்ளிக் கொடுத்தது. 1980ல் குரு 200 நாள்களைக் கடந்து ஓடியது. யாழ்ப்பாணத்திலும் பெரும் வெற்றி பெற்றது. 1982ல் மூன்றாம்பிறை 300 நாள்களைக் கடந்து ஓடியது.


1996ல் இந்தியன் 200 நாள்களைக் கடந்து ஓடி கமலை வசூல் சக்கரவர்த்தியாக்கியது. 1990ல் மைக்கேல் மதன காமராஜன் என்ற காமெடி படம் 225 நாள்கள் கடந்து ஓடியது. 1989ல் கமல் 3 வேடத்தில் நடித்த அபூர்வ சகோதரர்கள் படம் 200 நாள்களைக் கடந்து ஓடியது.

1987ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் 200 நாள்களைக் கடந்து ஓடியது. 1982ல் வெளியான படம் வாழ்வே மாயம். இது 200 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. 1982ல் சகலகலாவல்லவன் படம் 200 நாள்களைக் கடந்து ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

1992ல் வெளியான படம் தேவர் மகன். இது 200 நாள்களைக் கடந்து ஓடியது. 1983ல் தூங்காதே தம்பி தூங்காதே படம் 200 நாள்களைக் கடந்து ஓடியது. 1985ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ஒரு கைதியின் டைரி 275 நாள்களைக் கடந்து ஓடி மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. 2000ல் தெனாலி 200 நாள்களும், 1996ல் அவ்வை சண்முகி 200 நாள்களைக் கடந்து மாபெரும் வெற்றியைப் பெற்றது.

பொதுவாக 80களில் கமல் நடித்த படங்களைப் பார்க்கும்போதே ஒரு உற்சாகம் வந்து விடும். அவரது வசனமும், பாடலுக்கு ஆடும் ஆட்டமும், பைட்டும், குறும்புத்தனமான பேச்சும் ரசிகர்களைக் குதூகலமாக்கி விடும். பாடல்கள் எல்லாமே படம் வரும் முன்பே ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவிடும். ஆடியோ கேசட்டுகளின் விற்பனை அமோகமாக இருக்கும்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.