
பிக்பாஸ் பங்குபெற்றதன் மூலம் அனைவருக்கும் தெரிந்த நபராக அறியப்பட்ட பிக்பாஸ் புகழ் கவின் மற்றும் அம்ரிதா நடிப்பில் உருவான லிப்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
பிக்பாஸில் வந்த கையோடு அவர் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து லிப்ட் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார்.
இவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்திருக்கிறார். இப்படத்தை ஈகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. நட்பின் அடிப்படையில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் ஜூன் 20 ஆம் தேதி சூழ்நிலை காரணமாக தியேட்டர் திறக்கவில்லை, இதனால் ஓடிடியில் படம் வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது லிப்ட் திரைப்படமானது ஓடிடியில் வெளியாகும் என நம்பதகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது.





