">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
KGF நடிகர் திடீரென மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் பிரார்த்தனை!
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான இப்படம் பல விருதுகளை குவித்து கன்னட சினிமா உலகை பெருமையில் ஆழ்த்தியது. இந்த படத்திற்கு பிறகு இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்திய நடிகர் யாஷ் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்பட்டு இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
கன்னடத்தில் ரூ.200 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை படைத்த கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு சிறந்த சண்டை காட்சி மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டிற்கான தேசிய விருது பெற்றது. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளிவந்த இப்படம் பல்வேறு வெற்றிகளை குவித்தது.
அதையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது உருவாகி வருகிறது.கொரோனா ஊரடங்கினாள் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வில்லன் ரோலில் நடித்து வரும் இந்தி நடிகர் சஞ்சய் தத் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது.
இதையடுத்து அவருக்கு கொரோன தொற்று என வதந்தி பரவிய நிலையில் இது குறித்து ட்விட் பதிவிட்டுள்ள நடிகர் சஞ்சய் தத், ” மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், எனக்கு கொரோனா இல்லை வேறு சில காரணங்களால் மருத்துவமனையில் உள்ளேன். மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Just wanted to assure everyone that I’m doing well. I’m currently under medical observation & my COVID-19 report is negative. With the help & care of the doctors, nurses & staff at Lilavati hospital, I should be home in a day or two. Thank you for your well wishes & blessings
— Sanjay Dutt (@duttsanjay) August 8, 2020